குறுக்கு வழியில் குபேரனாக வேண்டும் என்பதால் சிலர் வழி தவறி சென்று விடுகிறார்கள்,மாட்டிக்கொண்ட பிறகு “ஐயோ மண்டைப் புழு மாண்டு போச்சே, தப்புப் பண்ணிட்டேனே,கடவுளே காப்பாத்து ” என்று கடவுளுக்கு மனு போடுவார்கள். கழுத்துக்கு கத்தி வந்த பிறகு புதிதாக ஞானம் பிறக்கும் .இவ்வளவு கோடியை விட்டுட்டு எப்படி இருக்க முடியும் என்று சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டே ஓடி விடுவார்கள்.
அப்படி ஓடிப்போனவர்தான் நடிகை மம்தா குல்கர்னி!
இந்தியாவை அதிர வைத்த சோதனையில் மாட்டியவர்களில் கணவன் மனைவி இரண்டு பேருமே சிக்கினார்கள். 2200 கோடி மதிப்பு உள்ள போதை மருந்துகள். சர்வதேச கடத்தல் கும்பலின் தொடர்பு.என மம்தா குல்கர்னி ,கணவர் கோஸ்வாமி இருவருடன் இன்னும் 12 பேர் மாட்டினார்கள்.
18.5 டன் ‘எபிட்ரின்’ 2.50 டன் ‘அசிடிக் அன்ஹைடர்ட்’ என்கிற இரண்டும் இந்தியாவில் தடை செய்யப்பட்டவை. இவற்றின் மதிப்புதான் 2200 கோடி.!
தப்பி ஓடிய மம்தா தற்போது கனடாவில் இருக்கிறார். மும்பையில் உள்ள இவரது மூன்று பிளாட்டுகளை கைப்பற்ற நீதி மன்றம் உத்திரவு போட்டிருக்கிறது.பிளாட்டுகளின் மதிப்பு 20 கோடி தான்.
கனடாவில் இறந்து கொண்டு மத்திய மந்திரி சுஷ்மா ஸ்வராஜ்க்கு கருணை மனு அனுப்பி இருக்கிறார் மம்தா.
“அம்மா நான் நிரபராதி. அப்பாவி. தற்போது ‘யோகினி’ அதாவது துறவி .நானா செய்வேன் தவறு?”என கருணை காட்டச்சொல்லி இருக்கிறார். குங்குமப்பொட்டு பெரிய அளவில்!
கருணை அந்த பொட்டுக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் !