இல்லாதவன் குடும்பங்களில்தான் தொல்லைகள் கூத்தாடும் என்பதில்லை. இருக்கிறவன் வீடுகளிலும் ஜாதகம், சம்பிரதாயம் வரைக்கும் ஏழரைச் சனி ஏடா கூடமாக நடந்து கொள்ளும்.!
மோகன்லாலின் கல்யாண விஷயத்தில் கக்கத்தில் வைத்திருந்த ஜாதகப்பையில் வில்லன் உட்கார்ந்து இருந்திருக்கிறான்.
“இரண்டு ஜாதகமும் கூடி வரல.வேற எடம் பாருங்க”என்று ஜோதிடர் சொல்லிவிட்டார்.
பெண்ணின் அப்பாவான தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜி “ரெண்டு ஜாதகமும் கூடி வரல. வேற இடம் பார்த்துக்குங்க.” என சொல்லி மோகன்லாலின் குடும்பத்தை திருப்பி அனுப்பி விட்டார்.
இரண்டு குடும்பத்தினரும் அதை மறந்து விட்டார்கள். இரண்டு வருஷம் ஓடிவிட்டது.படப் பிடிப்புக்காக கோழிக்கோடு சென்ற மோகன்லால் அங்குள்ள கே.சி.பாலு என்கிற நண்பரின் வீட்டில்தான் வழக்கம் போல தங்கினார். மறுபடியும் கல்யாண பேச்சு. பாலு ஒரு ஜாதகம் கொண்டுவந்தார்,
அது பாலாஜியின் மகள் சுசித்ராவின் ஜாதகம்.
“இரண்டு ஜாதகமும் பத்து பொருத்தம் பொருந்தி இருக்கிறது .இந்த ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது என்று எவன் சொன்னான்.என்னிடம் கூட்டிவாருங்கள். பின்னி எடுக்கிறேன்” என்று கோழிக்கோடு ஜோதிடர் சவால் விட அதற்கு பின்னர் கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்திருக்கிறது.
இந்த ரகசியத்தை தற்போதுதான் சொல்லி இருக்கிறார் மோகன்லால்!