தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ‘காலா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை சமீபத்தில் அப் படத்தின் தயாரிப்பாளர்,நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் ஜூன் 7ம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அடுத்து பாடல்கள் வெளியீட்டு தேதிக்காக ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருந்தனர்.இந்நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தனது மகளுடன் அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், வரும் நான்காம் தேதி சென்னை திரும்புகிறார்.இந்நிலையில் தான் தற்போது இசை வெளியீட்டு விழா மே, 9-ம் தேதி நடக்கும் என தயாரிப்பாளர் தனுஷ் மீண்டும் அதிரடி அறிவிப்பை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.கபாலி படத்தை தொடர்ந்து ரஜினியில் காலா படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார் .சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்