எதையெல்லாம் காட்டக் கூடாதோ, அதை காட்டி ஆடினால் அந்த படத்தில் பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் தணிக்கைகுழு தயவாக நடந்து கொள்ளும்.நெற்றிக்கண்ணை திறக்காது .ஆனால் அப்பாவி சப்பாணிகள் நடித்த படங்கள் என்றால் கத்திரிக்கோலை சாணை பிடித்து வைத்துக் கொள்வார்கள்.அடி வயிறைத் திறந்து அடிக்கணக்கில் குடலை வெட்டி எடுத்து விடுவார்கள்.அல்லது ஏ சர்டிபிகேட்.
இப்படித்தான் அண்மையில் கேரளாவில் ஒரு சண்டை.
சுராஜ் என்கிற சின்ன நடிகர் நடித்திருக்கும் படம் ஆபாசம். பரத்துடன் ஜோடியாக நடித்திருந்த ரீமா கல்லிங்கள் கதாநாயகி. இந்த படத்தில் நடிகர் தொடையை காட்டி இருந்தாராம்.
“அதெப்படி அவர் தொடையை காட்டலாம்,பிடி ஏ சர்டிபிகேட்” என்று சென்சார் சர்டிபிகேட்டை நீட்டி இருக்கிறது.
“வாங்க முடியாது” என்று தயாரிப்பாளர் சைடில் மறுப்பு.
நாயகி ரீமா என்ன சொல்கிறார்.
“என்ன கொடுமைங்க. ஒரு ஆம்பளை தொடையை காட்டினால் அடல்ட்ஸ் ஒன்லியாகி விடுமா? புலி முகன் படத்தில் மோகன்லால் தொடையை காட்டி நடித்திருந்தாரே,?சுராஜ் காட்டியது குற்றமா?
சென்சார் அனாவசியமாக குறுக்கீடுகள் செய்வது நல்லது இல்லை. இது ஜனநாயக நாடு! இதே மாதிரியான காட்சிகள் சூப்பர் ஸ்டார் படங்களில் இருந்தால் சென்சார் கவனிப்பதில்லை.இந்த போக்கு மாறவேண்டும்” என்கிறார் ரீமா,
கடைசியில் படத்துக்கு யு.ஏ .சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது. நடிகரின் தொடை மீதே யு.ஏ .எழுத்துகளை போஸ்டரில் அடித்து அதை டிசைனாக்கி விட்டார்கள்.
நம்மை விட அவர்கள் தில்லானவர்கள்தான்!
படம் :சையது ஷியாஸ் மிர்ஷா எடுத்தது.