”எங்கேடா எலி அம்மணமா ஓடுது ” என விரட்டிக்கொண்டு ஓடுவதுதான் செய்தியாளர்களின் வேலையா ?” என்று கேட்பதைப் போல பலமாக நக்கல் சிரிப்பு சிரிக்கிறார் பிரியங்கா சோப்ரா.
விமானத்தில் செல்லும்போது சோப்ராவின் கையில் ஒரு பிரேஸ்லெட் இருந்திருக்கிறது. அதுதான் மங்கல்சூத்ரா என வட இந்திய ஊடகங்கள் கருதிக்கொண்டு ரகசிய திருமணம் நடந்து விட்டது என செய்திகளை பரப்பி விட்டார்கள்.
கழுத்தில் கட்டவேண்டியதை கையில் யாராவது கட்டுவார்களா? அப்படியே ரகசியமாக நடந்திருந்தாலும் அதை பகிரங்கமாக கையில் கட்டிக்கொண்டா ஆட்டுவார்கள்?
பிரியங்கா சோப்ராவின் ரி ஆக்ஸன் என்ன?
பலமான சிரிப்பு!
“ரொம்பவும் மட்டமா கணக்குப் போட்டுட்டிங்களே! கொள்ளிக்கண்ணு நானே உங்களிடம் சொல்லிட்டுத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.ரகசிய கல்யாணம் என்கிற அவசியமே இல்லை” என சொல்லி இருக்கிறார். தற்போது அசாமில் சல்மானுடன் ஆட்டம் படத்துக்காக!