அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாகச் சென்றுள்ள ரஜினி,அமெரிக்காவில் தான் தங்கியிருக்கும் 10 நாட்களில் மருத்துவப் பரிசோதனைக்காக 2 நாட்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளார் என்கிறார்கள். தனது மருத்துவப் பரிசோதனைகள் முடிந்ததும், தனது கட்சிக்கான இணையதள கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு பணிகளைகவனிக்கிறார்.
வரும் நான்காம் தேதி நள்ளிரவு சென்னை திரும்பியதும் ,கட்சியின் பெயர், கொடி அறிமுகம், கட்சியின் முதல் மாநாடு, கட்சியின் கொள்கை, திட்ட விளக்கம் உள்ளிட்டவை அடுத்தடுத்து இருக்கும் என்றும் ரஜினி தரப்பில் கூறப்படுகிறது.இந்நிலையில்,ரஜினி, அமெரிக்கப் பயணத்தின்போது அவர் மெட்ரோ ரயிலில் பயணிப்பது மற்றும் எஸ்கலேட்டரில் செல்லும் புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.இந்நிலையில் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், அமெரிக்காவில் உள்ள ரஜினியின் புதிய புகைப்படமொன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.கோட் சூட்டுடன் ரஜினி தோன்றும் அப்படம் தான் தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.