இருப்பவர்களிடம் வாங்குவதில் தப்பே இல்லை.! ஆனாலும் நடிகர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற அபயக்குரல் கோலிவுட்டில் உரத்துக் கேட்கும் நேரத்தில் எதையுமே உடைத்துப் பார்க்கும் பயில்வான் அந்த அபயக்குரலை கேட்க வேண்டும் அல்லவா?
அவரும் கேட்பதாக இல்லை. வாங்குகிறவரும் யோசிப்பதாக இல்லை. இதுவரை தென்னக திரை உலகில் எவரும் வாங்கியிராத சம்பளத்தை ரஜினி வாங்கி இருப்பதாக சொல்கிறார்கள். அது வயிற்றெரிச்சலா, அல்லது வதந்தியா என்பது தெரியவில்லை.
சன்பிக்சர்சின் புதிய படத்தின் வேலைகள் ஜூனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கார்த்திக் சுப்பராஜின் ஸ்கிரிப்ட் வேலைகள் மே கடைசிக்குள் முடிந்து விடும் என்று சொல்கிறார்கள்.
இதற்கிடையில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவை பெரிய அளவில் நடத்துவதற்கு திட்ட மிட்டிருக்கிறார்கள் ,ஒன்பதாம் தேதி தமிழ்நாடு திரும்பிவிடுவாரா ரஜினி?