இயக்குனர் பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி. அவரை ரஜினிகாந்த் சென்று பார்த்தார்.இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை நடிகர் ரஜினிகாந்த்,நடிகை குஷ்பூ உள்ளிட்ட வர்கள் சென்று பார்த்தனர்.பாலசந்தர் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் கூறியதாவது,பாலசந்தர் என்னை பார்த்து சிரித்தார். அவருக்கு ஒன்னும் ஆகாது .கடவுளை பிரார்த்திக்கிறேன் .இவ்வாறு அவர் கூறினார். அண்ணல் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது./