டிரிபிள் வி ரெகார்ட்ஸ் V.வினோத்குமார் தயாரிக்கும் படத்திற்கு ‘’அச்சமின்றி’’ என்று பெயரிட்டுள்ளனர்.இதில்,விஜய்வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், பரத் ரெட்டி, சைவம் வித்யா, தேவதர்ஷினி, கும்கி அஷ்வின், ஜெயகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கி வரும் ராஜபாண்டி. கூறியதாவது,’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீனம்பாக்கம் பின்னி மில்லில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பரத்ரெட்டி, சேரன்ராஜ், ஜெயகுமார், ஆகிய மூன்று வில்லன்களின் அடியாட்களுடன் மோதி விஜய்வசந்தும் – சிருஷ்டிடாங்கேவும் தப்பிப்பது போன்று ஸ்டன்ட் காட்சிகள் படமாக்கப்பட்டது. சண்டைக்காட்சியின் போது, எந்த வித பாதுகாப்பு உபரணங்களும் இன்றி சிருஷ்டிடாங்கே பங்கேற்றதால் கால்களில் பலத்த அடிபட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார் இயக்குனர் ராஜபாண்டி. இப்படத்தின் ஒளிப்பதிவை – ஏ.வெங்கடேஷ் கவனிக்க, பிரேம்ஜி அமரன் இசையமைத்து வருகிறார்.