ஆமை கடலில் இருந்து வருவதும் தெரியாது ,கரையில் முட்டையிட்டு விட்டு கடலுக்குள் திரும்பவும் செல்வதும் தெரியாது. அதைப் போலத்தான் அஜித்குமாரும்!
தமிழ்த் திரை உலகம் போராட்டத்தில் மூழ்கி கிடந்த அந்த இருண்ட காலத்தில் ரஜினி கமல் இருவரும் அரசியல் கட்சிக்குரிய அடித்தள வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக கணினி செயலிகள் வழியாக தங்களது கட்சி வேலைகளைப் பலப்படுத்திக்கொண்டார்கள்.
ஆனால் ஒரே ஒரு ஆள் ,எல்லோராலும் ஒதுக்கப்பட்ட ஆள் ,காவிரிக்காக மண் எடுத்தாயா மண்வெட்டி பிடித்தாயா .என்றெல்லாம் கேட்டு விமர்சிக்கப்பட்ட அந்த ஆள் மிகப்பெரிய வேலையை பார்த்திருக்கிறாரய்யா!
நாம் முன்னரே அஜித் அடிக்கடி நாசா தொடர்புடைய ஆட்களுடன் பேசி வருகிறார் என்பதை சொல்லியிருந்தோம்.தற்போதுதான் வேலை நிறுத்தம் நடந்த நாட்களில் என்ன செய்திருக்கிறார் என்பது அரசு வழியாக செய்தியாகி இருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் அரசு கையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் வாங்குவது பெருமைதானே!
ஒரு பக்கம் துப்பாக்கி சுடும் தற்காப்பு பயிற்சியில்! இன்னொரு பக்கம் ஆள் இல்லா விமானம் இயக்குவது தொடர்பான ஆராய்ச்சியில்! சென்னை எம்.ஐ.டி.யில் கவுரவ வேலை. மாணவர்களுக்கு செயலி வழியாக எப்படி செயல்படுவது என்பதை கற்றுத்தருவது.
அஜித் குமாருக்கு முன்னமே ஏரோ மாடலிங் கலையில் நல்ல தேர்ச்சி உண்டு.
மெடிகல் எக்ஸ்பிரஸ் 2018 என பெய0ரிடப்பட்டுள்ள ஆள் இல்லா விமானத்தின் முக்கிய பணி 30 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் தேவைப்படுகிற மருத்துவ உதவிகளை செய்வது என்பதாகும். விதம் விதமாக உரக்க ஒலி எழுப்பினாலும் ஆம்புலன்சுக்கு வழி கிடைக்காது .அவ்வளவு நெருக்கடியான மாநரகம்.மன்னிக்க மாநகரம்.
இந்த ஆள் இல்லா விமானம் பற்றிய போட்டி செப்டம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது அதில் அஜித்குமாரும் அரசு சார்பில் கலந்து கொள்கிறார்.