‘பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்” என காலை உதறுவார் வடிவேலு. படத்துக்காக காமடியாக சொல்லியிருந்தாலும் உண்மையிலேயே சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள்.
“உடம்பின் மேல்பாகம் எனக்கு பலவீனமாக இருந்தது. அதற்காக நான் அடிக்கடி சிரசாசனம் செய்து வந்தேன். தொடக்கத்தில் பயிற்சியாளர்கள் உதவி இருந்தது. ஆனாலும் நானாக செய்வதுதானே எனக்கு நல்லது. அதனால் போகிற இடமெல்லாம் யோகா மேட்டுடன் சென்று கிடைத்த இடத்தில் தலைகீழாக நிற்பதற்கு முயற்சி செய்வேன். பல நேரங்களில் விழுந்தாலும்.எழுந்து நின்று விடுவேன். இதனால் மனம் மிகவும் லேசாகிறது. உடம்புக்கு புது தெம்பு கிடைக்கிறது.இப்ப பேஸ்மென்ட் டும் ஸ்ட்ராங்.பில்டிங்கும் ஸ்ட்ராங்!” என்கிறார் அமலாபால்.ஆரோக்கிய பால்!