துரைக்கு கொஞ்சம் லேட்டானாலும் கோபம் பொத்துக்கொண்டு விடும் . ‘டிபனும் வேண்டாம், ஒரு மண்ணும் வேணாம்”என்று முறைத்துக் கொண்டு போகிறவன் வீட்டுக்குத் திரும்புகிறபோது அந்த மூஞ்சிக்காக நாலு முழம் மல்லிகைப்பூ. அவளுக்குப் பிடித்த இனிப்புகள் என அசடு வழிய திரும்புவான் . அப்போது ஆரம்பமாகும் அவளது ராஜ்ஜியம்!
“கடை மண்ணு ரொம்பவும் டேஸ்ட்டா , வீட்டு மண்ணு வேணாம்னு போனீங்களே ராஜா”என்று அவள் குடைகிறபோது அவன் குலைவதைப் பார்க்கணுமே அந்த கதை ஆகி விட்டது இயக்குநர் செல்வராகவனின் கதை!
அண்ணனின் ஃ பீல் ரொம்பவே தெரியிது.
“பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டாங்கிற போது ஒரு ஜாலி இருக்கும். ஆனா உண்மையிலேயே அது நடந்திட்டா? நடந்திருச்சுங்க.! இந்த விடுமுறைக்கு என்னை விட்டுட்டு அவ மட்டும் போயிட்டா! நான் ரொம்பவும் அப்செட்! எவ்ளோவ் பெரிய துயரம்” என்று அண்ணன் கண்ணீர் விடாத கவலையில்!