தெப்பக்குளம் தானே என்று கால் நனைக்க தண்ணீருக்குள் கால் வைத்தால் அவ்வளவும் சேறு என்றாகி விட்டது.
“வாய்ப்பு தாரேன்” என்று சொல்லி வாலிபத்தை விளையாடி விட்டான் .சான்ஸ் தரலே,வாழ்வும் தரலே “என்று தெரு மண்ணை அள்ளி வீசிய ஸ்ரீ ரெட்டி இப்போது அவிழ்த்து விட்டிருக்கும் ‘தேங்காய் எண்ணெய்’ மேட்டர் செம கிலியை ஏற்படுத்தி இருக்கிறது.
தயாரிப்பாளர்கள் அலறுகிறார்கள். பெயர் பட்டியலையும் வாசித்து விடப்போகிறாள் அடக்குங்கள் சாமிகளா என்று கெஞ்சி கூத்தாடுகிறார்கள்.
ஸ்ரீ ரெட்டி சொல்லியிருக்கும் அந்த கோக்கனுட் ஆயில் சமாச்சாரம்தான் என்ன?
“சில தயாரிப்பாளர்கள் ஹோமோசெக்ஸ் பிரியர்கள். வாய்ப்பு கேட்டு வரும் உதவி இயக்குனர்கள் சிலரை அதற்கு பயன் படுத்துகிறார்கள். அதற்காக அவர்கள் உபயோகிப்பது தேங்காய் எண்ணெய்!” என்கிறார்..
வெளங்கும்யா!