‘யட்சன்’ படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன், மீண்டும்மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் புதிய படத்தை இயக்கபோகிறார் என் கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில்,விஷ்ணுவர்தன் அடுத்து பாலிவுட்டில் களமிறங்கி இந்தி படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், படத்தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். கார்கில் போரின்போது உயிர்த் தியாகம் செய்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி அந்த படம் உருவாகவுள்ளதாகவும் ,இதில் விக்ரம் பத்ராவாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிக்க இருக்கிறார் என்ற தகவலையும் அவர் பதிவிட்டுள்ளார். இப் படத்தை கரண் ஜோஹர் மற்றும் ஷபீர் பாக்ஸ்வாலா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கான கதையை சந்தீப் ஸ்ரீவத்சவா எழுதி உள்ளாராம்..