பா.ரஞ்சித் இயக்கத்தில்,நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வருகின்ற ஜூன் 7ம் தேதி வெளியாகும் என்றும், இசைவெளியீட்டு விழா மே 9 ல் நடக்கும் என்றும், படத்தயாரிப்பளரும், நடிகருமான தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்தார்.இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாகுறித்து காலா படக்குழு, ‘காலா பட இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதிசென்னையில் உள்ள நந்தனம் ஓய,எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது’ என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கிடையே மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு சென்னை திரும்பினார் . வருகிற ஒன்பதாம் தேதி நடக்க இருக்கிற இசைவெளியீட்டு விழாவில் தனது அரசியல் கட்சி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றையும் அவர் வெளியிடவுள்ளாராம்