வெந்துபோன காயத்துக்கு எந்த மருந்து தடவலாம் என்று நொந்து போய்க் கிடக்கிற போது குச்சியை விட்டு ஆழம் பார்த்தா ஆத்திரம் வருமா வராதா?
அரிவராசனம் ஐயப்பன் பாட்டு பாடுகிறவர் என்றாலும் அவருக்கு கோபம் வரத்தானே செய்யும்?
அப்படித்தான் ஆகிப் போச்சு டெல்லியில்!
எண்ணி 11 பேருக்குத்தான் குடியரசுத் தலைவர் தேசிய விருது வழங்குவார் என்கிற அறிவிப்பினால் விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்கள் காந்தலில் இருந்த நேரமது.!
டெல்லி ஓட்டலில் தங்கி இருந்த ஜேசுதாஸ் வெளியில் வந்தபோது ஆர்வக்கோளாறு வாலிபர் ஒருவர் அவரிடம் நெருங்கிச் சென்றார். முண்டி அடித்துக் கொண்டு செல்பி எடுத்தார், முதல் முயற்சி பலன் இல்லை. இரண்டாவது முறையாக நெருங்கிச்சென்று எவன் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று செல்பி எடுத்த போது ஜேசுதாசுக்கு கோபம்.!
படக்கென செல் போனை வாங்கி அதில் இருந்த படத்தை அழித்து விட்டு திருப்பிக்கொடுத்து விட்டார்.
“சுயநலமி!” என்கிற அடடே மொழியுடன்!