உயிருடன் இருப்பவர்களை யமலோகம் கொண்டு செல்வதும், எதிர்பாராதவர்களுக்கு கல்யாணம் நடத்தி வைப்பதும் ஒரு ஆழத்தில் பிரின்ட் மீடியாக்களின் பொழுதுபோக்காக இருந்தது அதை தற்போது சோசியல் மீடியா, வாட்ஸ் அப்புகளுக்கும் பரவி இருக்கிறது.
அவர்களின் உச்சக்கட்ட விளையாட்டு ராகுல் காந்தி மீது பாய்ந்து இருக்கிறது.
பெற்றவர்களுக்கு இல்லாத கவலை நமக்குத்தானே இருக்கிறது!
ரேபரேலி தொகுதி சட்ட மன்ற பெண் உறுப்பினர் அதிதி சிங் மானேஜ்மென்ட் கல்வியில் உயர் பட்டதாரி. இவருக்கும் ராகுல் காந்திக்கும் இந்த மாதம் கல்யாணம் நடக்கப்போவதாக தட்டி விட்டிருக்கிறார்கள் .
“அடப்பாவிகளா! அவர் எனக்கு மூத்த அண்ணன் மாதிரிப்பா!” என்று அதிதி மறுத்திருக்கிறார். கர்நாடக தேர்தல் நடக்கவிருக்கும்போது இப்படி ஒரு புரளி கிளப்பியதில் பாஜக வின் பங்கு இருக்குமோ?
யார் கண்டது.?அரசியலில் இது சகஜமப்பா!