ஜோதிகாவின் மறுபிரவேசமான ’36 வயதினிலே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது. . இந்த விழாவில் தயாரிப்பாளர் சூர்யா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் ,சூர்யா-ஜோதிகா தம்பதிகளின் குழந்தைகளான தேவ் மற்றும் தியா ஆகியோர்களும் முதல் முறையாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.இவ் விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ‘பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படத்தை தயாரித்தது குறித்தும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தனக்கு இருக்கும் அக்கறை குறித்தும் விரிவாக பேசினார் . மேலும் தனது தயாரிப்பு நிறுவனமான 2D மற்றும் சக்தி மசாலா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து 10 பெண்களின் கனவுகளை நிறைவேற்ற உறுதி செய்திருப்பதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சூர்யா, ஜோதிகா, தேவ், தியா ஆகிய நால்வரும் இணைந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். இந்த விழாவுக்கு இயக்குனர் பாலா, ராதாமோகன்,சிவகுமார் ,கார்த்தி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.