அக்கினி நட்சத்திர வெயில் என்றாலும் வெப்ப சலனத்தால் ஆங்காங்கே மழை அடிக்கிறது.ஆனால் பாவப்பட்ட மாநகரம் என்பதால் சென்னையில் தூறல் கூட இல்லை. சுருண்டு போய் இருக்கிறார்கள் மக்கள்.
கடல் ஓரமாக சென்னை இருப்பதால் மாலை நேரத்தில் வீசுகிற குளிர்ந்த காற்று வெக்கையை தடுக்கிறது.
சூடேறிப் போய் இருக்கும் தனது ரசிகர்களின் வெப்பத்தை தணிக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பேசுவார் என ஊடகத்தினரும் எதிர்பார்க்கிறார்கள். மிகப்பெரிய அளவில் வருகிற ஒன்பதாம் தேதி மாலை ஆறரை மணி அளவில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் காலா இசை வெளியீட்டு விழாவை நடத்துகிறார் தயாரிப்பாளர் தனுஷ்.
திடல் கொள்ளாத அளவுக்கு கூட்டம் வரும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்புடன் செய்யப்பட்டுள்ளது.