கொண்டவன் துணை இருந்தால் குதிரை ஏறி சண்டை போடலாம் என்று கிராமத்துப் பக்கம் பெண்கள் பேசிக்கொள்வார்கள். அந்த தைரியம் சமந்தா அக்கிநேனிக்கு வந்திருக்கிறது. அவர் சோசியல் மீடியாக்களில் வெளியிடும் படங்களைப் பற்றி பலர் கண்டித்து எழுதுவதையோ, நக்கலடிப்பதையோ பற்றி சமந்தா சற்றும் கவலைப்படவில்லை.
“நான் போட்ட ஸ்விம் சூட் படம் பிரச்னையை கிளப்பும் என்று எதிர்பார்த்ததுதான்! ஏம்பா கடலுக்கு போறவங்க புடவையை கட்டிக்கிட்டா போவாங்க?அப்படி போட்டால் நீங்கள்தான் கவனிப்பிங்களா?
நான் இன்ன படம்தான் போடணும்னு நீங்க யார் சொல்றது? நான் கல்யாணம் ஆனவள் என்பதால் வசை பாடுகிறீர்களா?எனது வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை எவரும் சொல்ல வேண்டியதில்லை.
என்னை பயமுறுத்தப் பார்க்காதீர்கள் .முத்தக்காட்சியில் நடிக்கலாமா என கொந்தளிக்கிறீர்களே ,கன்னத்தில் தானே முத்தமிட்டேன். லிப் லாக் இல்லையே? எங்களை இந்த மாதிரி கேட்கிறீர்களே கல்யாணம் ஆகிய சூப்பர் ஸ்டார்களை கேட்க முடியுமா? எனது மாமனார் அந்த செய்திகளைப் பற்றி கவலைப்படுவதில்லை” என்கிறார் சமந்தா அக்கிநேனி.