கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாலையில், சன்டிவியில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ,நாட்டிய பேரொளி பத்மினி, ஆச்சி மனோரமா. நாகேஷ்,பாலையா ஆகியோரின் நடிப்பில் உருவான இன்றைய இளைய தலைமுறையினரும் ரசித்து மகிழும் காலத்தால் அழியாத காவிய மான, தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்திருப்ப்பார்கள் .அதிலும் ஜில் ஜில் ரமா மணி யாக கலக்கிய ஆச்சி யின் நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது . இப்படத்தை அன்று நடிகர் விவேக் கும் பார்த்து ரசித்துள்ளார்.அதோடு விட்டு விடாமல் ,உடனடியாக ஆச்சி மனோரமாவின் வீட்டுக்கு சென்று அவரை பாராட்டி மகிழ்ந்து ஆசியும் பெற்று
திரும்பியிருக்கிறார். இக் செய்தியையும் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தன ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.