ரஜினியின் காலா படத்தின் பாடல்கள் இன்று வெளியான நிலையில்,தமிழக அமைச்சர் ஜெயக்குமார் காலாபடத்தின் பாடல்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், ‘காலாபடத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைப்பதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது.அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிட நினைத்தால் தமிழக அரசு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது.காலா போன்ற காளான்கள் விரைவில் காணாமல் போய்விடும் சமுதாயத்திற்கான நல்ல கருத்துக்களை தனது படங்களின் மூலம் சொன்னவர் எம்ஜிஆர்’.இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சரின் பேச்சு ரஜினிவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .