ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் பட நிறுவன தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மாதவன் இயக்கும் படம் ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’ . ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலை மற்றவர்களுக்கு எவ்வளவு நகைச்சுவையாய் இருக்கக் கூடும் என்பதை சிரிப்புடன் கூறும் படமே ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’“நம்முடைய எல்லா நல்லது கேட்டதையும் நம்மை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் கூறிக்கொண்டே இருப்பார்கள். முக்கிய கதாப்பாத்திரங்களின் சூழ்நிலைகளை அடிப்படையாய்க் கொண்டு நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டது இந்த ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’. திரைப்படம்”“DS வாசன் ஒளிப்பதிவில், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில், ரிஷால் சாய் இசையமைப்பில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார் யுகபாரதி. படம் விரைவில் வெளியாக உள்ளது இதுவரை பார்த்த தொழில்நுட்ப கலைஞர்களும், நபர்கள் எல்லோருமே நாலு வார்த்தை நல்ல விதமா தான் சொல்லிருக்காங்க. இது ரசிகர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்” தனக்கே உரித்தான நகைசுவையுடன் கூறினார் அறிமுக இயக்குனர் மாதவன். . இப்படத்தில்,சிங்கமுத்து , சுவாமிநாதன், நடன இயக்குனர் சிவசங்கர், நாயகி தேவிகா மாதவன் என நகைசுவைக்கு பெயர்போன கூட்டணியுடன் களமிறங்குகிறார் அறிமுக நாயகன் இந்திரஜித்.தேவிகா மாதவன் கதாநாயகியாக களமிறங்குகிறார்.