உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நடந்தார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் முன்னிலை வகித்து நடந்தார்.
இன்று உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் பார்க்கின்சன்ஸ் நோய். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் கை நடுக்கம் என்று தொடங்கி படிப்படியாக உடல் செயலிழப்பு வரை ஏற்படும். இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1மில்லியன் பேர் உள்ளனர். ஆனால் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால்தான் இந்த நடைப்பயண ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.