பாபி சிம்ஹாவும் (செல்லப்பாண்டி) , லிங்காவும் (கார்த்திக்) ஒரே அறையில் தங்கியி ருக்கும் நண்பர்கள். கார்த்திக் , கை நிறைய சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும்இளைஞன். செல்லப்பாண்டி, சினிமா கனவுகளுடன் வாய்ப்பு தேடி அலையும் சினிமா உதவி இயக்குநர். இவர்களுடன்தங்கி இருக்கும நண்பர்களும் வேலை தேடும் இளைஞர்களே! இந்நிலையில் அவசர வேலையாக ஊருக்கு செல்லும் கார்த்தி ஒரு விவாகரத்தான பெண்ணின் அறிமுகம் கிடைக்க, வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி , அவளை தன் அறைக்கு அழைத்து வருகிறார். இவர்களுக்குள் காதல் வேறு! அதில் கர்ப்பமாகும் நாயகியை நைசாகப் பேசி கர்ப்பத்தை கலைத்து கழற்றிவிட பார்க்கிறார் கார்த்திக்! அது முடியாமல் போகிறது.இதனால் அப்பெண்ணிடமிருந்துதப்பி ஓடிய கார்த்தியை , காதலியிடம் காட்டிக் கொடுக்கிறார் சக அறை நண்பர் பிரபஞ்ச ன் .இதனிடையே பாபி சிம்ஹாவுக்கும், அவரது புதிய ஹவுஸ் ஓனர் மகளுக்குமிடையில் காதல் வருகிறது. அதை அந்த பெண்ணிடம் வௌிப்படுத்துவதற்குள், அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் நிச்சயம் ஆகிவிடுகிறது. இதனால் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்யும் பாபி மற்றும் நண்பர்கள் வீடு தேடி அலைவதையும், அவர் அடைக்கலம் கொடுத்தவர்கள் அல்வா கொடுக்கும் கதையையும், மேற்படி காதலர்கள் ஒன்று சேர்ந்தனரா..? இல்லையா…? என்ற கதையே, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. இப்படத்தின் திரைக்கதையை மிகவும் வித்தியாசமாக, அதே சமயத்தில் . விறுவிறுப்பாகவும் படமாக்கியிருக்கி றார் அறிமுக இயக்குநர் எம்.மருதுபாண்டியன். சினிமா உதவி இயக்குநர் செல்லப்பாண்டியனாக பாபி சிம்ஹா வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது! கார்த்திக்காக வரும் லிங்கா, அண்ணன் மகனுக்கு சைக்கிள் வாங்கித்தர இரண்டாயிரம் பணம் இல்லாது பரிதவிக்கும் பிரபஞ்சயன், கதா நாயகிகள் சரண்யா, பனிமலர், என ஒவ்வொருவரும் அந்தந்த கேரக்டர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். அதிலும் புதிய அறைக்கு அட்வான்ஸ் தர முடியாமல் அவ்வீட்டின் சொந்தக்காரர்கள் தூங்கிய பின் வீட்டிற்கு வந்து, அவர்கள் கண் விழிக்கும் முன்பே அறையை விட்டு எஸ்கேப் ஆகும் இடங்களில் பாபிசிம்ஹா ஜொலித்திருக்கிறார். அவர் வீடு வாடகை கொடுக்க முடியாததால் சங்கடப்பட்டு, இரவில் மாடிப் படியில் பதுங்கி பதுங்கி காத்திருப்பதும், அதை பார்த்து ஆரம்பத்தில் அடாவடியாக பேசும் வீட்டுக்காரர் மகள் அதன்பின் மனம் மாறி பாபி சிம்ஹாவுக்கு ஆதரவு தரும் காட்சிகளும் தத்ரூபமாக படமாக்கப்பட்டிருப்பது இயக்குனருக்கு சபாஷ் போட வைக்கிறது., அதே போல் காதல் காட்சிகள் துளி கூட விரசமில்லாமல் படமாக்கப்பட்டிருக்கும் விதம், அவர் அறிமுக இயக்குனர் என்பதையே நம்மால் நம்ப முடியவில்லை . நல்ல தயாரிப்பாளர்கள் கிடைத்தால் நல்ல கதையும் தொடர்ந்து அமையும் பட்சத்தில் பெரிய ரவுண்டு வருவார். சென்னையில் திருமணமாகாத இளைஞர்கள் தங்க வீடு கிடைக்காமல் படும்பாட்டை அழகாக படம்பிடித்திருகிறார். ஒவ்வொரு காட்சியும் ஒருவகையில் புதுசாகஇருப்பதால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. கிரணின் படத்தொகுப்பு, வினோத் ரத்தினசாமியின் ஔிப்பதிவு, கார்த்திக் நேத்தாவின் பாடல்கள், கேமலின் – ராஜாவின் இசை உள்ளிட்டவை படத்திற்கு பலம் சேர்க்கிறது. அதே சமயம் அடிக்கடி வரும் புகைப்பிடித்தல், மதுகுடித்தல் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ,ரசிகர்களிடமும் நல்லவரவேற்பையே பெற்றிருக்கிறது!
TECHNICIAN LIST
Release : ATM Productions – T. Madhuraj
Production : Kariyampatti Studios – M. Maruthupandian, B.A., D.F.T.
Written & Direction : M. Maruthupandian, B.A., D.F.T.
Cinematography : Vinoth Rathnasamy
Editing : Kiran K.N.
Music : Camlin – Raja
Lyrics : Karthick Netha
cast and crew;
· Bobby Simha
· Linga
· Prabanjayann, DN.
· Saranya
· Panimalar
· Nisha
· Alphonse Puthran