காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது.மிக பிரம்மாண்டமாக நடந்த இவ் விழாவில் கலந்துகொண்டு ரஜினிகாந்த் பேசியதாவது, “ புத்திசாலிகளிடம் ஆலோசனை கேட்க வேண்டும், ஆனால் அதி புத்திசாலிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். கருணாநிதியின் குரலை கேட்க ஆவலாக உள்ள கோடானு கோடி பேரில் நானும் ஒருவன். நான் இமயமலைக்கு போறதே கங்கையை பார்க்கத்தான்.சில நேரங்களில் ரவுதிரமா இருக்கும் சிலநேரம் ரொம்ப அமைதியா இருக்கும் என்னுடைய வாழ்நாள் கனவு நதிகள் இணைப்பு தான். தண்ணீர் பிரச்சினை என்றால் என்னை அறியாமல் ஆர்வம் வந்து விடுகிறது. என் வாழ்க்கையின் கனவும் தென்னிந்திய நதிகளை இணைப்பதே.
நல்லவனாக இருக்க வேண்டும். ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது என்பதை தெரிந்து கொண்டேன் . அப்படி இருந்தால் கோழை என்பார்கள். லிங்கா சரியாபோகலே,ரஜினி அவ்வளவு தான் படம் சரியா போகல ,நான் முடிந்துவிட்டேன் என 40 வருஷமா சொல்லிகிட்டு இருக்காங்க அவங்களுக்கு என்னடா, இந்த குதிரை ஓடிகிட்டே இருக்கே? என்கிற எரிச்சல்தான்அதை பார்த்து வயிறு எறியத்தான் செய்யும் .ஆனால், என்னை ரசிகர்களாக நீங்களும், கடவுளும் தொடர்ந்து ஓட வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.யார் என்ன சொன்னாலும் என் ரூட் .நான் போய்கிட்டே இருப்பேன். இதை பார்த்து நான் ஏற்கனவே உங்களிடம் சொன்ன செவிட்டு தவளை கதை தான்எனக்கு ஞாபகம் வருது. பாட்சாவுல ஆண்டனி ,படையப்பாவுல நீலாம்பரி மாதிரி காலாவுல ஒரு ஹரிதாதா. நானாபடேகர் பிரமாதமா நடிச்சிருக்கிறார்.அவர் நடிப்பை பார்த்து வாரே வா பாக்கலாம் என நானும் நடித்திருக்கிறேன் . காலா அரசியல் படம் இல்லை. படத்தில் அரசியல் இருக்கிறது. இத படத்தை மொத்தம் 85 திட்டமிட்டபடிஎடுத்து முடித்திருக்கிறார்.ரஞ்சித் மிக உயர்ந்த இடத்துக்கு வருவார். தன்னை சேர்ந்தவர்களும் மேலே வர வேண்டும் என்று நினைப்பவர் இயக்குநர் ரஞ்சித்.தன்னை சேர்ந்த சமூகம், நண்பர்கள் என, அனைவரையும் மேலே கொண்டு வர வேண்டும் என்ற, எண்ணம் கொண்டவர். ஒரு மரம் வளர, மண், உரம், தண்ணீர் தேவை. அதேபோல், நாம் வளர, நல்ல யோசனை வேண்டும். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு வழி கொடுங்கள். மோசமான சிந்தனை வந்தால், நல்ல சிந்தனையாக மாற்றுங்கள்.மோசமான சிந்தனை வந்தால், உட்கார்ந்து விடுவோம். சந்தோஷமான சிந்தனை வந்தால், துள்ளி குதிப்போம். எனவே ,நல்ல விஷயங்களை சிந்தியுங்கள். வாழ்க்கை நன்றாக இருக்கும்.என் ரசிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இது ஓன்று தான் .பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்தால் உங்கள் வாழ்க்கையே மகிழ்ச்சியாக இருக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு கவனம் கொடுங்கள். என் ரசிகர்கள்,மற்றும் மீடியாக்கள் எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க ,நான் என்னபண்றது கண்ணா,இன்னும் தேதி வரலியே .கடமை இருக்கு, நான் மறக்கல, நேரம் வரும் போது தமிழகத்திற்கு நல்ல நேரம் பிறக்கும், நல்ல காலம் பிறக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.