காலா படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் மிரட்டலாக நடந்து முடிந்திருக்கிறது. அந்த அளவுக்கு தனுஷ் அமைத்த அரங்கம் மயன் அமைத்தது போல அமைந்து இருந்தது.
தமிழ்ப் போராளி அனிதாவையும் மறக்காமல் காட்சிப் படுத்திய இயக்குநர் பா. ரஞ்சித்தை பாராட்டாமல் இருக்க முடியாது. இது ஒன்றே படத்தின் நோக்கம் எதை நோக்கிப் பயணிக்கும் என்பதை உணர்த்தி விடுகிறது.
சமுதாய எழுச்சிக்கான காலம் தொடங்கி இருக்கிறது என சொல்லலாம்.கரிகாலன் என்கிற பெயரை எம்.ஜி.ஆருக்குப் பின்னர் ரஜினிதான் ஏற்றிருக்கிறார்,
விழாவில் குறைவாக பேசினாலும் ரஜினி சொன்னதை வைத்து புத்தகமே எழுதி விட முடியு பழகலாம்.பேச்சை கேட்கலாம்.ம்!
“சிவாஜி பட வெற்றி விழாவில் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.அவரது பேச்சை விரும்புகிறவர்களில் நானும் ஒருவன். அவரது குரலை விரைவில் கேட்க பிரார்த்தனை செய்கிறேன்.
புத்திசாலிகளுடன் பழகலாம் அதிபுத்திசாலிகளின் ஆலோசனைகளை கேட்கக்கூடாது.( குருமூர்த்தி?) ஏனென்றால் அவர்கள் பல யோசனைகள் வைத்திருப்பார்கள் .திட்டங்கள் போட்டிருப்பார்கள்.. எனது வாழ்நாள் ஆசையே தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான். இது நடந்து விட்டால் நாளையே கண்ணை மூடி விட தயார்” என்று சொன்னபோது மொத்தக் கூட்டமும் கூடாது கூடாது என்று குரல் எழுப்பியது.
தனுஷ் வெடித்த குண்டு சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“நேற்று வில்லன் நடிகர், பிறகு சூப்பர் ஸ்டார் இன்று தலைவர், நாளை?” என்று புதிர் போட்டது ஆளும்கட்சிகளுக்கு அடிவயிற்றை கலக்கி இருக்கும்.