“அமிதாப் பச்சன் லைகாவின் தயாரிப்பில் நடிக்கிறாராம். சூர்யாதான் ஹீரோ “என்பதாக கோலிவுட்டில் பெரிய பரபரப்பு, எதிர்பார்ப்பு ஓடியது.
தற்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது!
“அமிதாப் இல்லை! மோகன்லால் நடிக்கிறார். கே.வி .ஆனந்த் இயக்குகிறார். பட்டுக்கோட்டை பிரபாகரின் கதை. ஜூன் 25. ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. மிகப்பெரிய அரசியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்
சரி இருவரில் யார் கதாநாயகன்?
இருவருமேதான் என்கிறார்கள், அப்படியானால் வில்லன் இல்லாமல் படமா?
அதை இயக்குநர் அல்லது கதாசிரியரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். இது லைகாவின் மிகவும் பிரமாண்டமான தயாரிப்பு. என்கிறார்கள்.