மாணவர்களும் பேராசிரியர்களும் நண்பர்களாக பழகினால் மாணவர்கள் என்கிற சக்தியை உதவியாக கொண்டு பேராசிரியர்கள் எவ்வாறு ஒரு நல்ல எதிர்காலம் சமூகத்திற்கும், மாணவர்களுக்கும் அமைத்து தர முடியும் என்பதை ஆணித்தரமாக கூறும் படமே “பேராசிரியர் சாணக்யன்”.தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற கல்லூரிகள், தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கலைஞர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் கோர்வையாக சேர்த்து படத்தின் ஆரம்ப பாடலாக,”அண்ணாவும் படிச்சாரு, அறிஞரும் ஆனாரு, கல்லூரி என்கின்ற பேரறிவாலே…கலாமும் படிச்சாரு, விஞ்ஞானி ஆனாரு, கல்லூரி என்கின்ற பேரொளியாலே…”எனத் தொடங்கும் கல்யாண்ஜி வரிகளில் உருவான பாடல் “பேராசிரியர் சாணக்யன்” படத்திற்காக சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் புலன் விசரனை செய்யப்படும் காட்சிகள் விறுவிறுப்பாகவும், பல எதிர்பாராத திருப்பங்கள் கொண்டவையாகவும் இருக்கும். பேராசிரியர் சாணக்யன் வேடத்தில் நடிக்கும் மெகா ஸ்டார் மம்மூட்டி கதாபாத்திரம் சாதுர்யமும் சாமார்த்தியமும் நிறைந்தது.வரலட்சுமி சரத்குமார் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவீன சினிமாவின் விஜயசாந்தி என்று கூறுமளவிற்கு அவரின் நடிப்பு அனைவரையும் கவரும். இப்படத்தில் பேராசிரியரும் (மம்மூட்டி) காவல்துறை அதிகாரியும்(வரலட்சுமி சரத்குமார்) சந்திக்கும் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த காட்சிகளுக்கு அனல் பறக்கும் வசனங்களை அமைத்து கொடுத்துள்ளார் வி.பிரபாகர் என்கிறார் இயக்குனர்அஜய் வாசுதேவ் .மேலும் இப்படத்தில் மஹிமா நம்பியார், பூனம் பாஜ்வா, கோகுல் சுரேஷ், உன்னி முகுந்தன், மக்பூல் சல்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.நடிகை பூனம் பாஜ்வா மிகவும் கவர்ச்சியாக இப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ஸ்டன் சில்வா, கனல் கண்ணன், சிறுத்தை கணேஷ், ஜோலி மாஸ்டர், மாபியா சசி ஆகிய 5 சண்டைப்பயிறசியாளர்கள் பணிபுரிந்துள்ளனர். பாடல்களை விவேகா, கல்யாண்ஜி எழுதியுள்ளனர்இப் படத்தை நியு ராயல் சினிமாஸ் சார்பாக C.H.முகமது தயாரிக்கிறார்.