மணிரத்னம் இயக்கத்தில் துல்ஹர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ காதல் கண்மணி’ திரைப் படம் வரும் 17ஆம் தேதி வெளியா கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பி.சிஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கை குழுவினரின் யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடந்தது. இச்சந்திப்பில் கலந்து கொண்ட பாடலாசிரியர் வைரமுத்து பேசியதாவது,” இப்படத்தின் கதையைப் பொறுத்தவரை இந்திய சமூகத்தில் ஒரு கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்குகிற கதை. இந்த கலாச்சார அதிர்ச்சியை கலைஞர்கள் உண்டாக்குகிறார்களா, சமூகம் உருவாக்குகிறதா என்பது மிகப்பெரிய கேள்வி.ஒரு திரைக்கலைஞன் கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்க முடியும். ஆனால், ஒரு வணிக எல்லைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறான். என்னைப் போல ஒரு படைப்பாளி, கலாச்சார அதிர்ச்சியை எழுத்தில் உண்டாக்கி விடமுடியும். ஆனால், ஒரு திரைக்கலைஞன் கலாச்சார அதிர்ச்சியை திரையில் கொண்டு வருவதற்கு பல கோடிகளை முதலீடு செய்ய வேண்டும். அந்த கலாச்சார அதிர்ச்சி வணிக ரீதியிலும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். ஒரு பரிசோதனை முயற்சியாக இப்படத்தை மணிரத்னம் செய்திருக்கிறார். இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்கிற நிறுவனம் இருக்குமா என்ற ஒரு பெரிய கேள்வி இந்திய சமூகத்தில் நிலவுகிறது. உலகமயமாக்குதல் என்கிற ஒரு பெரிய ராட்சத அலையில் வட்டார கலாச்சாரங்களும், மொழிகளும், பண்பாடுகளும் மெல்ல மெல்ல அதிர்வுகள் காணக்கூடிய நிலையில் இந்த படம் வெளிவருகிறது. இந்த அடித்தளத்தை நினைத்துக் கொண்டு இந்தப்படத்தை நீங்கள் துய்த்தால் உண்மை நம் கண்களுக்கு பிரகாசம் ஆகுமென்றே நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இது பத்திரிகை யாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது . இது குறித்து பல பத்திரிகையாளர்கள் கேவிகள் எழுப்பியும் சம்பந்தமாக இயக்குனர் மணிரத்னம் எவ்வித கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டார். மேலைநாட்டு கலாச்சாரத்தின் தாக்கத்தில் நமது நவநாகரீக இளைஞர்களும் நமது தமிழ் கலாச்சா ரத்திற்கு சற்றும் ஒவ்வாத திருமணம் செய்யாமலே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது. ‘லிவிங் டுகெதர்’ எனும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்திருப்பதை மையமாக வைத்தே இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறாராம் மணிரத்னம். அதனாலேயே இப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் முதலில் வழங்கப்பட்ட இருந்ததாம் .படக்குழுவினரின் பெரிய போராட்டதிற்கு பிறகே , யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாம்.ஏற்கனவே அங்கொன்றும் ,இங்கொன்றுமாக நடந்து வரும் ‘லிவிங் ‘டு’ கெதர்’கலாச்சாரம் இப்படத்திற்கு பின் மிக வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .இதன் காரணமாக இப்படத்தை தடை செய்யக்கோரிவிரைவில் போராட்டம் வெடிக்கும் எனத் தெரிகிறது.இது குறித்து பல பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்பியதும் மைக்கை பிடித்த இயக்குனர் மணிரத்னம் ,’சமூகத்தில் நடப்பது சரியா, தவறா என்று சொல்வதற்கு இரண்டரை மணி நேரம் படம் எடுக்க மாட்டோம். நீங்கள் அனுபவித்து பார்த்து, இந்த பாத்திரம் செய்தது சரியா என முடிவெடுங்கள். இது எப்படி இந்த சமூகத்தை பார்க்கிறது என்பது தான் படம்.நீங்கள் பேனா, பேப்பரை விட்டுவிட்டு வந்தால் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். ஏதாவது விஷயம் இருந்தால் அதைப் பற்றி பேசலாம். இந்தியாவில் நடக்கும் விஷயத்துக்கு எல்லாம் நான் கருத்து சொல்ல முடியாது இல்லையா. ஒரு இயக்குநர் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் கருத்து சொல்ல முடியாது. என்னுடைய களம் படம் இயக்குவது, அதில் எனது கருத்துக்கள் வெளிப்படும். என்றவர் மேலும் படத்தின் கதை குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டார்.