‘ கோ’இரண்டாம் பாகம் உருவாகிறது.
சமீப காலங்கலில் ரீமேக் படங்களுக்கும், தொடர்கதை அமைப்பு படங்கள் எனக் கூறப்படும் இரண்டாம் பாகம் படங்களும் திரையுலகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம். தங்களது முந்தைய படமான ‘கோ’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறியதாவது,
“ எங்கள் நிறுவனத்தின் ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று வெகுவாய் ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. இந்த சமயத்தில் விஷ்ணு வர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராய் பணி யாற்றிய சரத் என்னிடம் ஒரு கதையை சொன்னார். கதையைக் கேட்டு முடிக்கும்முன்பே இப்படத்தை எங்கள் நிறுவனம் தான் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது என்றால் அதே குழு, மற்றும் அதே நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றில்லாமல் அந்த தலைப்புக்கு ஏற்றவாறு வேறு நடிகர்களை நடிக்க வைக்க முடிவு செய்தோம்.
“ அந்தக் கதாப்பாத்திரத்தின் வலிமைக்கு தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா கனகச்சிதமாய் பொருந்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி. மேலும், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு கண்டிப்பாய் அனைவரது எதிர் பார்ப்பிற்கும் வித்தாய் அமையும் என்று நம்புகிறோம். என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஷங்கர் கவனிக்க, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.