இரும்புத்திரை படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கும்,காண வரும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பு கேட்டு மனு!11-5-18 அன்று வெளியான விஷாலின் இரும்புத்திரை படத்துக்கு சில அமைப்புகளால் அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் வருகின்றன. எனவே தகுந்த பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் அகில இந்திய புரட்சி தளபதி விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் மனு கொடுத்தார். இதையடுத்து,தகுந்த நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.விஷால் வீட்டுக்கும் மிரட்டல் காரணமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால், “சமூகத்தில் நடந்துவரும் சமூக பிரச்னைகள், வரும்காலத்தில் சந்திக்கப்போகும் பிரச்னைகள் குறித்து படத்தில் பேசியுள்ளோம்.யாருக்கும் ஆதரவாகவோ, திட்டமிட்டு விமர்சித்தோ படத்தில் கருத்து சொல்லப்படவில்லை. அதனால், நான் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. நான் சட்டத்தை மதிப்பவன். காவல்துறையை நம்புபவன். படத்திற்கு எதிரான எதிர்ப்புகள், போராட்டங்களை காவல்துறையினர் பார்த்துக்கொள்வார்கள்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்,.