இயக்குநர்இமயம் பாரதிராஜா மீது போலீசார் திடீர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்துக் கடவுளை அவதூறாகப் பேசினார்என்ற இந்துமக்கள் கட்சியினர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதி சென்னை வடபழனியில் வேலுபிரபாகரனின் ‘கடவுள்-2’ படவிழாவில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார். அதில் ஆண்டாள் குறித்து கருத்து தெரிவித்த வைரமுத்துவிற்கு ஆதரவாக பேசிய அவர் ஆயுதம் எடுப்போம் என பேசியதாகவும், விநாயகரை இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் என பேசியதாகவும் இந்து மக்கள் முன்னணியினர் புகார் அளித்தனர்.அந்த புகாரின் மீது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் வடபழனி போலீஸார் இயக்குநர் பாரதிராஜா மீது 295(எ) ( மத நம்பிகைக்களுக்கு எதிராக மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது), 506(1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.