உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன் ‘வருகிற மே 1 ந்தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் விடுத்துள்ள அறிக்கையில், இப்படம் சம்பத்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் அமைதியான முறையில் பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக அறிவித்துள்ளது. முன்பு ‘விஸ்வரூபம்’ படத்தை ‘டி.டி.எச்’ -ல் வெளியிட கமல் ஹாசன் தீர்மானித்த வேளையில், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கமலின் படத்திற்கு திரையரங்குகளில் வெளியிட தடை விதித்தது. எனவே கமல், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக competitive of india-வில் வழக்கு பதிவு செய்துள்ளார் அதாவது, திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு குறிப்பிட தொகையை அபராதமாக கட்ட வேண்டும் என்பதாகும். உத்தமவில்லன் வெளியீடு தேதி நெருங்கிய வேளையில் படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.இந்நிலையில் உத்தமவில்லன் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ,கமல் போட்ட வழக்கை வாபஸ் வாங்குமாறும். கமலுக்கு அபராத தொகை விதித்தும் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக படம் வெளியாவதில் திடீர் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இதில் தலையிட்டு இருவருக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளது. கமல் தற்போது competitive of india-வில் போட்ட வழக்கை வாபஸ் பெறவும், முந்தைய வழக்கில் நீதிமன்றம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு விதித்த அபராத தொகையை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் செலுத்தும் எனவும் கூறியுள்ளது.