ஆலமரத்துக்கு அடியில் படுத்துக் கிடந்தாலும் அதற்கும் ஒரு வழக்கு வருமோ?
என்னவோ தெரியவில்லை.! “பிள்ளையார் அமர்ந்திருந்த இடம் ஆயிற்றே! மானிடப்பதரே, நீ எப்படி படுத்து உறங்கலாம்” என வழக்கு பதிவானாலும் வியப்பதற்கில்லை.
ஆக்டபஸ் தனது கரங்களை விரித்து இரைதேடி வருகிற காலமிது!
விஜயநகரத்தை வென்றெடுத்த போது கொண்டுவரப்பட்ட சிலைதான் பிள்ளையார் என சரித்திரம் சொல்கிறது.
சரித்திரம் சொல்லலாம். ஆனால் பாரதிராஜா சொல்லலாமா?
போடு வழக்கு!
இதற்குத்தான் கவிப்பேரரசு வைரமுத்து பதில் சொல்லியிருக்கிறார்.
“பாரதிராஜா மீது வழக்கு.
பழி வாங்கும் செயலாகும்.
வழக்கு பெரிதல்ல.
ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல.
அவரை நாங்கள்
சட்டப்படி மீட்டெடுப்போம்!” என்கிறார் வைரமுத்து.