‘ யான் ‘ தோல்வியை தழுவிய நிலையில் ஒரு ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஜீவா,பொறுமையாக ஸ்கிரிப்டை தேர்வு செய்து வருகிறார். இநிலையில் தற்போது இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் . ஓன்று, டிகே இயக்கும் புதிய படமான ‘கவலை வேண்டாம் ‘ . இதில்,ஜீவாவுடன் ஸ்ரீ திவ்யா ஜோடி சேருகிறார். இவர்களுடன் தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாவும் நடிக்கிறார். இதை அடுத்து அம்பாசமுத்திரம் அம்பானி புகழ் பி.எஸ்.ராம்நாத் இயக்கும் ‘திருநாள்’ என்ற புதிய படத்திலும் நடிக்கிறார். இப்படத்தில் ஜீவாவுடன் நயன் தாரா ஜோடி சேருவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்படத்தின் படபிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ளது.