தன் இயக்கத்தில் உருவான ‘ வை ராஜ வை ‘பட வெளியீட்டை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ள ஐஸ்வர்யா தனுஷ் ,அடுத்து ,தன் அப்பா ரஜினியை இயக்குவார் என்ற செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து ஐஸ்வர்யா தனுஷ் பேசுகையில்,’ நான் ரஜினியின் மகளாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் அவரது ரசிகையாக இருக்கவே விரும்புகிறேன். அவரின் படத்தை இயக்கம் அளவுக்கு நான் இன்னும் அனுபவத்தை பெறவில்லை .ஆனால், எனக்குள் அவரை இயக்கக்கூடிய தைரியம் வந்தவுடனேயே என் அப்பா ரஜினியின் படத்தை இயக்குவேன் என்கிறார். இதற்கிடையில் மும்பையில் சங்கரை ரஜினி சந்தித்து இந்திரன் இரண்டாம் பாகம் குறித்து பேசியதாகவும் ,இதில் அமீர்கான் முக்கியா கேரக்டரை ஏற்கிறார் என்றும் ,இப்படத்தை லைகா பட நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது./