“என்னடா இது சோதனை. ?ஸ்டிரைக் முடிந்து இத்தனை நாளாகியும் தமிழ்ச்சினிமா உலகில் வம்பு சத்தமே கேக்கல? வெயிலுக்கு பயந்து ஊட்டி கொடைக்கானல்னு கிளம்பிட்டாங்களா?” என்கிற சந்தேகம் வந்தது.
சென்னையில் பூகம்பத்தைக் கிளப்பணும்னு அங்கங்கே வெடிகளை புதைச்சு வச்சிருக்கோம்.அதிரப்போகுது பாருங்கள்.என்று சிலர் ஆந்திரா கிளப்பில் கூடி இருக்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ் நடிகர்கள் சங்கம் என்பதாகவும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்பதை தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்பதாகவும் பெயர் மாற்ற வேண்டும் என்று பேசினார்களாம்..கசாப்புக் கடையில் அமர்ந்து கொண்டு மாமிசம் சாப்பிடாதே என உபதேப்பதைப் போல ஆந்திரா கிளப்பில் அமர்ந்து கொண்டு உபன்யாசம்?
“விஷால் சொன்னதை நிறைவேற்றவில்லை.பதவியை விட்டு விலகவேண்டும் “என்பதாகவும் பேசி இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் பாரதிராஜா, ராதாரவி, ராதாகிருஷ்ணன்,சுரேஷ் காமாட்சி அழகன்தமிழ் மணி .ராஜன் ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
விஷாலை விரட்டி விடுவார்களா?