வைகை ஆற்றில் அழகரை பார்க்க வந்த கூட்டத்தை போல இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் பார்க்க கூட்டம் தியேட்டருக்கு வரத்தான் செய்கிறது.
யாரை நோவது,யாரை குட்டுவது, என்பதை விட இதையும் அடல்ட் காமடி என்கிற பெயரில் அனுமதித்திருக்கிற தணிக்கைக்குழுவை தாளிப்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்! சரி சம்பந்தப்பட்ட சங்கமே மூடிக்கிட்டு இருக்கிறபோது இருட்டு அறையில் எப்படி குத்து விழுந்தது என்கிற ஆராய்ச்சி நமக்கு எதுக்கு?
நடித்திருக்கிற நடிகைக்கு பதின்ம வயதுதான். யாசிகா ஆனந்த். இந்த மகராசியை பெற்றவர்களே மனம் குளிர்ந்து போய் இருக்கிறார்கள்.
“இப்படி நடித்தால் என்ன தப்பு, கப்பலா கவுந்திடப்போகுது?” என்கிற மனப்பான்மை யாசிகாவுக்கு.
“ஸ்கூலில் படிக்கும்போதே ஆன்லைன் கலாட்டாதான் அதிகம் கதை சொல்வேன்..படங்கள் பார்ப்பேன்.. தெரிந்து கொண்டவைகள் ரொம்ப.! அதை எல்லாம் சொல்ல முடியாது. ரொம்பவும் பெர்சனல். துருவங்கள் 16 படத்தில் சின்ன வேஷம்தான் என்றாலும் தமிழ்நாட்டுக் கல்லூரிகள் முழுக்க பிரபலமாகி விட்டேன். நிறைய கலாச்சார நிகழ்ச்சிகள்.! பாடம் என்கிற படத்தில் டீச்சர் வேஷம்.( என்னத்தை சொல்லிக் கொடுக்கப் போகிறாரோ ?) ஆயிரம் கால் மண்டபம் படத்தில் சைக்கியாரிஸ்ட் .இன்னும் பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறேன். என்னுடைய ஆசை எல்லாம் பாலிவுட் கதவை உடைச்சிட்டு உள்ளே போகணும்! பெரிய ரவுண்டு வரணும்!” என்பதுதான் என்கிறார் முரட்டுக்குத்து நடிகை!