தல 56 படத்தில் அஜித்தின் தங்கையாக நடிக்க முன்னணி கதாநாயகிகள் மறுத்து வருகின்றனர். முதலில் அஜித்துடன் இணைந்து நடிக்கத் துடித்துக் கொண்டிருந்த பிந்து மாதவி தங்கைகேரக்டர் என்றதும், உடனடியாக மறுத்து வெளியேறினார். இதையடுத்து நித்யாமேனன் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் ,நித்யாமேனனின் நண்பர்கள் ,’ஓ.கே . கண்மணி’ வெளியாகி அவரது நிலைமையை மாற்றும் என்றும் ,அது வரை அவரை காத்திருக்கும் படியும் அறிவுறுத்தவே ,நித்யாமேனனும் இப்படத்திலிருந்து விலக, தற்போது ஸ்ரீ திவ்யாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம் . ஸ்ரீ திவ்யாவின் மார்க்கெட் மெதுவாக அதே சமயம் ஸ்டெடியாக முன்னேறி வருவதால் அவரும் மறுத்து விடுவார் எனக்கூறப்படுகிறது.