போதி மரத்தின் கீழ் அமர்ந்ததால்தான் ஞானம் வந்திருக்குமா புத்தனுக்கு!
ஞானஸ்தன் அங்கு அமர்ந்ததால் போதி மரத்துக்கும் ஒரு பெருமை.
பொதும்பு முருகன் என்று நாடக உலகில் கொடி கட்டிப்பறந்தவருக்கு சினிமா வழியாக வந்த சிறப்புப்பட்டம் “சங்கிலி” முருகன்.
திரை உலகத்துக்கு மதுரை தந்த பெருமைகளில் இவரும் ஒருவர். சிகர நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார், தயாரிப்பாளர், கதாசிரியர்,நடிகர் என்று பன்முகம் கொண்டவர்.
திடீரென ஞாயிற்றுக்கிழமை 13-ம் தேதி அவரை தொடர்பு கொண்டோம்.
அவர் மதுரை சிக்கந்தர் சாவடி அருகில் கட்டியிருக்கிற சிவன் கோவில் மிகவும் பிரசித்தமாகி இருக்கிறது என கதாசிரியர் ஒருவர் சொன்னது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
“…ண்ணே! நீங்க மதுரையில் சிவனுக்கு கோவில் கட்டி இருக்கீங்க?”
“ஆமா.! அத எதுக்கு இப்ப கேக்கிறே?”
“இல்ல…. கோவில் கட்டுற எண்ணம் எப்படி வந்துச்சு? நம்ம ஊர் பக்கம் சொல்வாங்களே, கனவுல வந்து கடவுள் சொன்னாரு, இல்லேன்னா நேர்த்திக்கடன்னு சொல்வோம்ல..அந்த மாதிரி ஏதாவது…?”
“அப்படியெல்லாம் இல்ல மணி! தோணுச்சு! அது கட்டி முப்பது வருஷம் இருக்குமே.! முதலில் சிவனை மட்டும்தான் வச்சேன். பிறகுதான் எங்கண்ணன் கிட்ட ஒரு நந்தியையும் வச்சிருப்பா .இல்லேன்னா சிவன் ஓடினாலும் ஓடிருவாருன்னேன். இப்ப நல்ல கூட்டம் வருது! மக்கள் நம்பிக்கையா வர்றாங்க” என்று சொல்லிக்கொண்டே வந்தவர் திடீர் என “இன்னிக்கு பிரதோசம்ல ” என்று கேட்டு விட்டு “போயிருக்கனும்பா. அந்த சிவன் ஞாபகப் படுத்துறமாதிரி இருக்குது” என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அனேகமாக திங்கள் செவ்வாய் மாதிரியில் அவரை கோவிலில் பார்க்கலாம்,