பார்ப்பதற்கு மட்டும் கண்கள் படைக்கப்படவில்லை.
படைக்கப்பட்ட அழகினை ரசிப்பதற்கும்தான்!
ரசிக்கத் தெரிந்தவன் கலைஞன் .தெரியாதவன் மூடன். இப்படித்தான் நினைக்க முடிந்தது கேன்ஸ் படவிழாவில் ஐஸ்வர்யாராய் பச்சனை பார்த்தபோது!
கண்ணதாசனும் நினைவுக்கு வருகிறார்,
“புகழ் எப்படி வருகிறது”
சிலர் வாங்குகிறார்கள்.
சிலர் வாங்கப்போய் வழுக்கி விழுகிறார்கள்”! என்பார் கவிஞர் .
ஐஸ்வர்யாராய்பச்சனை புகழ் தேடி வருகிறது.
உலக அழகியாக இருந்தும் உச்ச நடிகர் இல்லத்து இளவரசியாக திகழ்ந்தும் ஏனோ தெரியவில்லை தலையில் கனம் இல்லை.
பிரெஞ்சுப் படம். இரானிய நடிகை கோல்ஸ் பெத் நடித்தது. பட அறிமுக விழாவுக்கு லோ ரியல் பாரீஸ் பிராண்ட் அம்பாசடராக பச்சனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு.
துபாயை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் கைத்திறன்தான் ஐஸ்வர்யா அணிந்திருந்த பட்டர் பிளை கவுன்.
இந்த கவுனுக்கு பொருத்தமான மற்றவர் கீர்த்தி சுரேஷ் என நமக்குத் தோன்றுகிறது.
உங்கள் கருத்து?