மோடி இவ்வளவு கஷ்டப்பட்டு யார் யாரையோ கன்வின்ஸ் பண்ணி ‘எப்படியும் தென்னாட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே புகுந்துவிட வேண்டும்’என ராஜ தந்திர வேலைகள் எல்லாம் செய்தார்.
ஆனால் தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அடுத்த வியூகம் ஆடு, மாடு பேரம்தானே!
அதற்குபி.ஜே.பி தயாரான நிலையில்தான் பலர் “பிரகாஷ்ராஜ் எங்கே ?” என ‘நெட்’டித் தள்ளுகிறார்கள்.
அவரோ” நாளை { 16] பார்க்கலாம்.பி.ஜே.பி. அரசு அமைக்க கர்நாடகம் அனுமதிக்காது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவர்களை உள்ளே விட்டால் நாடு அமைதியாக இருக்காது” என மந்திரக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
யார் யாரை பிஜேபி மிரட்டி பணிய வைக்கப்பார்க்கும் என்பது அதில் தெரியுமாம்.
எல்லாம் சரி பிஜேபி ஆட்சி அமையாது என்பதால் காவிரியில் தண்ணீர் வரவே வராதா? பொண்டாட்டி ஜாடை காட்டினாலும் மாமியார் கட்டையைப் போடுகிறாளே?