அந்த ஏ.சி .தியேட்டரின் மொத்த ஏசியின் குளிர்ச்சியும் அந்த ஒன்னரை நிமிட நேரத்தில் அமிழ்ந்து போனது. ‘ஆண்டனி’ என்கிற படத்தின் முன்னோட்டச்சுருள் அத்தனை சூடாக இருந்தது. இந்தியாவின் முதல் ‘கிளாஸ்ட்ரோஃபோபிக் ‘ சஸ்பென்ஸ் திரில்லர். ரேகா ,லால் என சில தெரிந்த முகம் .மற்றவரெல்லாம் அறிமுகம். இயக்குநரும் புதுமுகம் குட்டி குமார். அவர் ‘போடியம்’ உயரம்தான் இருந்தார்.
நிலத்துக்கு அடியில் ஆறு அடி ஆழத்தில் புதையுண்டு போன ஒரு காருக்குள் உயிருள்ள ஒரு ஆள். கதாநாயகன். எந்த வெளிச்சமும் இல்லாத இருட்டு உலகத்தில் அகப்பட்டவனின் மன நிலையைச் சொல்வதுதான் ஆண்டனி அவனுள் உறைந்து போயிருக்கும் மனநிலையை சொல்வதுதான் இந்த போபிக் படம்.
அதுசரி கதாநாயகனுக்கு ஏன் ஆண்டனி என்கிற பெயர்?
“ஆண்டனி என்கிற பெயரில் அதிரடியான தாக்கத்தை ஏற்படுத்திய ரகுவரனின் சாரின் நினைவுக்கு அஞ்சலி செலுத்துவதாக வைத்துக் கொள்ளுங்களேன்” என்கிறார் இயக்குநர் குட்டி குமார்.
முன்னோட்டச்சுருள் வெளியிட்டவர் இயக்குநர் நடிகர் ,தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இவரை பேச அளித்த தொகுப்பாளர் பாரதியின் வரிகளைச்சொல்லிவிட்டு “தளபதி ரசிகர்களின் குலசாமியும் சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டுகிற டிராபிக் ராமசாமியுமான எஸ்.ஏ.சி .அவர்களே “என விளித்தார் .
“தமிழ் என்றால் அழகானது. மூத்த மொழி, தமிழ் என்றும் வெற்றி பெறும் .இன்றைய இளைஞர்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. உள்ளுக்குள் ஒரு நெருப்புடன் இருக்கிறார்கள்.அற்புதமான படைப்புகள் .அதனால் என்னுடைய ஆபீசுக்கு வாட்ச்மேன் கிடையாது. இரண்டு படங்கள் வெற்றி பெற்றாலே இரண்டு வாட்ச்மேன்கள் பத்து பனிரெண்டு அசிஸ்டெண்டுகள். இவர்களைத் தாண்டி ஒரு இளைஞன் அந்த இயக்குனரைப் பார்த்து கதை சொல்ல வேண்டும்! அதனால்தான் நான் வாட்ச்மேன் வைத்துக் கொள்ளவில்லை” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.