மொத்தை மீசை வைத்திருந்தாலும் அதை முறுக்க முடியாத இடம் பொஞ்சாதிதான்!
“யோவ் ..மாங்கா! அந்த முறுக்கெல்லாம் வெளியேதான். இங்க அந்த விளையாட்டு வேணாம்” என்று எத்தனையோ மனைவிகள் கணவனை மிரட்டி வைத்திருப்பார்கள். சினிமாவிலும் அத்தகைய ஆதர்ஷ தம்பதிகள் உண்டு. சில விதி விலக்கு உண்டு. அதிகமாக மிரட்டினால் டேராவை மாற்றி விடுவார்கள்.
சினிமாவில் நடிகர்கள் பெண் வேஷம் போடுவது அந்த படங்களில் மட்டும்தான்!
ஆனால் தனது தயாரிப்பு காஸ்ட்யூம்கள், பெண்கள் அணிகிற டிசைனர் சேலைகளுக்காக புருஷனை பெண்ணாக மாற்றி அந்த படங்களை வீதியில் விளம்பரமாக வைத்திருக்கிறார் ஒரு நடிகை.
அவர் பெயர் சரிதா!
பெண்ணாக ‘மாறிய’ நடிகர் ஜெயசூர்யா!
சூப்பரப்பு.!
தொழிலில் கணவன்-மனைவி ஒத்துழைப்புக்கு நல்ல உதாரணம்!
கடன்காரனிடம் கணவனை மாட்டி விடுகிற சில மனைவிகளும் இருக்கிறார்களே!.