செம மூடில் இருந்தார் விஷால்!
‘இரும்புத் திரை’ பட வெற்றிக்காக பத்திரிக்கை ,ஊடகத்தினருக்கு நட்சத்திர ஓட்டலில் மதிய விருந்து.
ஏடாகூடமாக வந்த கேள்விகளுக்கும் தன்மை அறிந்து பதில் சுருக்,நறுக் கென பதில் வந்தது.
“கதையைக் கேளுங்க நல்லா இருக்கும்னு சிலரை சில நண்பர்கள் அனுப்பி வைப்பார்கள். கதை பிடிக்கலேன்னா சிபாரிசு பண்ணியவரை ரூமுக்கு கூட்டிட்டுப்போய் அடி பின்னிருவேன். அப்படி ஒரு பழக்கம்.
சமூகத்தில இருக்கிற தப்புகளை ஏன் சொல்லக்கூடாது? ஆதார் கார்டுகளில் இருக்கிற கோளாறுகளை சொன்னோம். அதைப்போல சமூகத்துக்கு ஒவ்வாதவைகளை சொன்னதில் சிலருக்கு ( பாஜக.) கோபம் வருகிறது. வந்தால் வள்ளுவர் கோட்டம் போங்க,ஆர்ப்பாட்டம் பண்ணுங்க. இல்லேன்னா சென்சார் ஆபிஸ் முன்னாடி ஆர்ப்பாட்டம் பண்ணுங்க. சென்சார் பண்ணிய படத்தைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. குற்றப்பத்திரிக்கை படத்தை இன்று வரை வெளியிட முடியவில்லை.
விவசாயிகளுக்கு கடன் கிடையாது.மிலிட்டரி மேன்களுக்கு விசா கிடையாது என்பதெல்லாம் என்னய்யா நியாயம்?”என்று கேட்டவரிடம் வழக்கம் போல கல்யாணம் எப்போது என்று கேட்க அவரும் சட்டென ‘ஜனவரியில் ” என்று சொல்லிவிட்டார். இரும்புத்திரை பார்ட் 2 வரும் என்பதையும் அறிவித்தார்.
“கல்யாணப்பெண் யார் என கேட்டதற்கு “பார்த்திட்டிருக்கிறோம்” என்றார்.
அதான் தினமும் பார்த்திட்டிருக்கிறீங்களே ,அவங்கதானா விஷால்!