தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் புதிய படத்தில் இருந்து கால்ஷீட் ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து,ஸ்ருதிஹாசன் திடீரென விலகினார்.. இதனால் அந்தப்படத்தை தயாரிக்கும் பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம், எண்கள் படத்தில் நடிக்க மறுத்த ஸ்ருதிஹாசன் மற்ற எந்த படங்களிலும் நடிக்க புதிய ஒப்பந்தம் போடக்கூடாது என ஆந்திர நீதிமன்றம் மூலம் தற்காலிகமாக தடை வாங்கியது. இந்த விவகாரம் குறித்து இருவரும் பரஸ்பரம் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்திற்குபுகாராக எடுத்து சென்றனர்.இதற்கிடையில் ஸ்ருதி ஹாசனும் பதில் மனு தாக்கல் செய்தார் .இந்நிலையில் இருவரது புகார் குறித்தும் நடிகர் சங்கத் தலைவர்
சரத் குமார், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு ஆகியோர் இரு தரப்பினரையும் அழைத்து பேசியதில், சுமூகமான தீர்வு ஏற்பட்டதால் தான் ஸ்ருதிஹாசன் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டுள்ளது பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம். சுருதி ஹாசன் வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் பட நிறுவனத்திடம் திரும்ப கொடுத்து விட வேண்டும் .இனி வரும் காலங்களில் இதுபோன்று சம்பத்தப்பட்ட சங்கங்களை விட்டு விட்டு நீதிமன்றங்களை நாடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நடிகர், நடிகைகள் தவிர்க்க வேண்டும் என இதுகுறித்து இரு சங்கங்களும் அறிவுறுத்தியுள்ளன. இதையடுத்து இப்பிரச்னை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது./