.
திருவொற்றியூரைச் சேர்ந்தவர் திருமதி சாந்தா. வயது 78. தீவிர ரஜினி ரசிகையான சாந்தா, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததுமே மகிழ்ச்சியுடன் களமிறங்கினார்.ரஜினி மக்கள் மன்ற கிளை உறுப்பினர் சேர்க்கை களப்பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் சாந்தாவின் ஒரே விருப்பம், ரஜினியைச் சந்தித்து தனது பணிகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான்.இது குறித்த தகவலை ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று ரஜினியிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சாந்தா அம்மாவை தன் இல்லத்துக்கு இன்று வரவழைத்த ரஜினிகாந்த், அவருக்கு பொன்னாடை அணிவித்து, அவரது களப்பணிக்கு கவுரவம் தந்தார்.