செம்மறி ஆடுகளாக திரை உலகம் இருந்தது உண்மைதான்!
“இனி அது உதவாது’ என சிலர் விலகி விட்டார்கள்.
இருந்தாலும் சிலர் ‘சாஞ்சா சாயிர பக்கம் சாயிர ஆடுகளாகவே” இருப்போம் என அடம் பிடிப்பது …..?
நடிகையர் திலகம் அதாவது தெலுங்கு மகாநதி மகத்தான வெற்றியை அடைந்ததும் சிலருக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கையை கதையாக்கினால் என்ன என்கிற சிந்தனை அடிமனதில்!
அபாயங்களை அறியாமலேயே!
முதலில் யாரை தேர்வு செய்வார்கள்?
எல்லா சிப்பிகளிலுமே நல்முத்து இருப்பதில்லை.சாவித்திரி ரோலுக்கு கீர்த்தி சுரேஷ் கிடைத்ததைப் போல ஜெ.வுக்கு கிடைப்பாரா?
சோபன்பாபு- ஜெயலலிதா எபிசோடு ஒன்று மட்டும்தான் வெளிப்படையாக படமாக்க முடியும்! பகிரங்கமாகவே லிவ் இன் .ரிலேசனில் இருந்தார்கள்.
அதிலும் சிலர் குட்டையை கிளப்பி இருக்கிறார்கள்.
“சோபன்பாபுவின் மனைவி அழகில்லாதவர்.அதனால்தான் அவர் ஜெ .பக்கமாக போனார்”என்பதாக சொல்ல ஆங்கு புயல் கிளம்பி இருக்கிறது.
“முழுப்பொய். சோபன் ஒருபோதும் அவரது மனைவியை ஏமாற்றியதில்லை. நேசித்தார். நட்பாக இருந்தவர்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். சோபன்-ஜெ வாழ்க்கையும் அப்படித்தான்.” என்கிறது ஆந்திராவின் புகழ் பெற்ற ஒரு குடும்பம். ஆருத்ரா மனைவி ராமலட்சுமி இதை தெரிவித்திருக்கிறார்,
“சோபன்பாபு திருமணம் ஆனவர். அவர் விவாக ரத்து செய்வதை நான் விரும்பவில்லை” என்பதாக ஜெயலலிதாவும் கூறி இருக்கிறார்.
ஜெயாவின் வாழ்க்கையை படமாக்குவது அத்தனை சுலபமில்லை. அவரால் பாதிக்கப்பட்ட எவ்வளவோ பேர் அரசியலிலும் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரை விட்டு விலகி சிவாஜி படங்களுக்கு மட்டுமே முதல் உரிமை கொடுத்தார் . அதை எல்லாம் சினிமாவில் காட்ட முடியுமா?
இடியாப்ப சிக்கல்கள் இப்படி எத்தனையோ?