மிகப்பெரிய தேசிய இனமாகிய தமிழீழ தமிழர்கள் மிகவும் மோசமாக படுகொலை செய்யப் பட்டதற்கு துணை நின்றவர்கள் வாழ்கிற பெரு நிலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால் இவர் சொல்வது உண்மையாக இருக்குமோ என்கிற ஐயம் வரவே செய்கிறது.
“ஸ்ரீ தேவி மரணம் இயற்கையானது இல்லை. அது திட்டமிட்ட படுகொலை” என்கிறார் வேத பூஷன் .ஓய்வு பெற்ற அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர்,தற்போது துப்புத்துலக்கும் டிடெக்டிவ் ஏஜன்சி நடத்துகிறார்.
எதன் அடிப்படையில் இவ்வளவு மோசமான குற்றச்சாட்டை வைக்கிறார்?
தொடக்கத்திலேயே துபாய் போலீசுக்கு சந்தேகம் இருந்ததால்தான் ஸ்ரீதேவியின் சடலத்தை உடனடியாக கொடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்துத்தான் தாமதித்துக் கொடுத்திருக்கிறார்கள். அண்மையில் துபாய் சென்ற வேத பூஷனுக்கு அதே ஓட்டலில் அதே அறையை கொடுப்பதற்கு ஓட்டல் நிர்வாகம் மறுத்து இருக்கிறது. பக்கத்து அறையை கொடுத்திருக்கிறார்கள். அங்கிருந்து துப்புத் துலக்கிய இவருக்கு என்ன சான்றுகள் கிடைத்ததோ அதை வைத்துக் கொண்டு இவர் சொல்கிறார் “திட்டமிட்ட கொடுமையான படுகொலை!” என்பதாக!
யார் கவலைப்பட போகிறார்கள்?
வட நாட்டுக்கு மருமகளாக போன ஸ்ரீ தேவிக்கு தங்கச்சி ஒருவர் இருக்கிறார் .அவர் என்ன சொல்கிறார்?